2026 மே 09, சனிக்கிழமை

dd

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள வடிகான்களிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக முறைப்பாடு

Suganthini Ratnam   / 2013 மே 08 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி நகரசபை பிரிவின் காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள வடிகான்கள் சில மூடப்படாததால் அவ்வடிகான்களுக்குள் குப்பைகள் கொட்டப்படுவதுடன்,  துர்நாற்றமும் வீசுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீனிடமே காத்தான்குடி பிரதான வீதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வர்த்தகர்கள் முறைப்பாடு செய்தனர்.

இவ்வடிகான்கள் மூடப்படாததால் வடிகான்களுக்குள் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் இவ்வடிகான்களிலிருந்து துர்நாற்றம் வீசுவதுடன், டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் இவ்வர்த்தகர்கள் சுட்டிக்காட்டினர்.

இதனைத் தொடர்ந்து காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் மற்றும் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.றபீனும்;  நேற்று செவ்வாய்க்கிழமை  இந்த வடிகான்களை பார்வையிட்டதுடன், இவ்வடிகான்களுக்கான மூடிகளை போடுவது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளனர்.

கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் இவ்வடிகான்களுக்கு டெங்கு நுளம்புகள் பெருகாதவாறு மருந்து தெளித்ததாக  காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.
                            

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .