-தேவ அச்சுதன்
மட்டக்களப்பின் பிரபல வணிகக்கல்வி ஆசிரியரின் வீட்டில் நேற்று முன்தினம் பகல் கொள்ளை நடைபெற்றுள்ளது.
இக் கொள்ளை தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் - ஆசிரியரின் வீட்டில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை கல்லடியிலுள்ள அவரது வீட்டில் யாரும் இல்லாதவேளை மேல்மாடியின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் அலுமாரிகளை உடைத்து அவற்றினுள் இருந்த 4-5 பவுண் வரையான நடைகளையும், 45 ஆயிரம் ரூபா பணத்தினையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாலை வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் பொருள்கள் வீசப்பட்ட நிலையில் இருப்பதனைக்கண்டு திருடர்கள் நுழைந்ததனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கே வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.