2026 மே 09, சனிக்கிழமை

பட்டிப்பளை பிரதேசத்தில் மிகப்பெரிய நெற்களஞ்சியசாலை

Kogilavani   / 2013 மே 15 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம்.நூர்தீன்


பட்டிப்பளை பிரதேசத்தில் ஒரு கோடியே தொண்ணூறு இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் பாரிய நெற்களஞ்சியசாலையொன்று அமைப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு, மனற்பிட்டி சந்தியில் இடம்பெற்றது.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் முயற்சியின் பயனாக இந்நெற்களஞ்சியசாலை  நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பட்டிப்பளை பிரதேச செயலளார் திருமதி சிவப்பிரியா வில்வரட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் குலசேகரம், மீள்குடியேற்ற அதிகார சபையின் பணிப்பாளர் சத்தியவதன் உட்பட முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல்லை களஞ்சியப்படுத்தும் நோக்கில் இந்த நெற்களஞ்சியசாலை அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .