2026 மே 07, வியாழக்கிழமை

பதில் அமைச்சராக ஹிஸ்புல்லாஹ் நியமனம்

Kogilavani   / 2013 மே 15 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரப் பதில் அமைச்சராக, பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் - ஜனாதிபதியினால் ஒருவார காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரளியத்த, கொரியவில் இடம்பெறும் மகளிர் விவகார அமைச்சர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்வதன் காரணமாக அந்த காலகட்டத்திற்குள் பதில் அமைச்சராக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்  செயற்படுவாரென பிரதியமைச்சரின் ஊடகச் செயலாளர் எம்.எஸ்.எம் சஜி தெரிவித்துள்ளார்.

குறித்த மாநாடு ஒருவார காலத்திற்கு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0

  • vallarasu Wednesday, 15 May 2013 08:11 AM

    இவர் ஒரு மௌலானவின் பேரன். இவர் மட்டும் வெளிநாட்டுக்குப் போய் பேரின விகாரையில் வெசாக் கொண்டாடலாம் என்றால், ஆசாத் சாலியின் மகள் விகாரைக்குச் சென்றதை ஏன் பெரிது படுத்துகிறார்கள்..??!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .