2026 மே 07, வியாழக்கிழமை

கிரான் பொதுச் சந்தைக் கட்டிடம் திறப்பு

Super User   / 2013 மே 15 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


வாழைச்சேனை, கிரான் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பொதுச் சந்தைக் கட்டிடம் இன்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் புறநெகும திட்டத்தின் கீழ் இந்த சந்தைக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தலைமையில் இடம்பெற்ற சந்தைக் கட்டிடத் திறப்பு விழாவில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த சந்தைக் கட்டிடத் தொகுதிக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .