2026 மே 06, புதன்கிழமை

சிறுவர்கள், இளைஞர்களின் மேம்பாட்டில் நாம் அதிக அக்கறை கொண்டுள்ளோம்: ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்

Kanagaraj   / 2013 மே 16 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுவர்கள்  மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் அபிவிருத்தி போன்றவற்றில் நாம் அதிக அக்கறை கொண்டுள்ளோம் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் பேர்னாட் சவேஜ் தெரிவித்தார்.

காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் 170 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட மாடிக்கட்டிடத்தை தூதுவர் பேர்னாட் சவேஜ் நேற்று பார்வையிட்டதன் பின்னர் அங்கு நடைபெற்ற வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கடந்த 10 வருடங்களாக இலங்கையில் ஐரோப்பிய ஒன்றியம் செயல்பட்டு வருகின்றது. 200 பாடசாலைகள் நிர்மாணித்தும், 2000 ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தும் உள்ளோம். இதனால் சிறுவர்களின் எழுத்தறிவு அதிகரித்துள்ளது என்றார்.

60 சுகாதார நிலையங்களில் பெரும்பாலானவை வடக்கு , கிழக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. 50,000 குழந்தை பிரசவங்களுக்கு திறன்மிக்க வைத்தியர்கள் பணிபுரிந்துள்ளனர் எஎன்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வைபவத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தலைமை இயக்குனர் வில்லி வண்டன்வேகி, ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தலைமை அதிகாரி சிமோணி மிரி, மட்டக்களப்பு யுனிசேவ் தலைமை அதிகாரி அஜாகு ரகுமான் மற்றும் கல்வி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .