2026 மே 07, வியாழக்கிழமை

ஐ.நா. வாழ்விடத்திட்டத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் புதிய வீடுகள்

Suganthini Ratnam   / 2013 மே 17 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


ஐக்கிய நாடுகள் சபை வாழ்விடத் திட்டம், (யு.என்.ஹபிடாக்ட்) மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மீள்குடியேற்றப் பிரதேசங்களில் 600 புதிய வீடுகளை நிர்மாணிக்கவுள்ளதுடன், 400 வீடுகளை புனரமைக்கவுள்ளன.

ஒவ்வொரு புதிய வீடும் 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், ஒவ்வொரு வீடும் 4 இலட்சம் ரூபா செலவில்; புனரமைக்கப்படவுள்ளன.

இந்நிலையில், செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் வெலிகாகண்டி கிராமத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 56 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அப்பிரதேச செயலாளர் எம்.உதயஸ்ரீதர் தலைமையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் பேர்னாட் சவேஜ் இதற்கான நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்.

இதேவேளை, வெலிகாகண்டி கிராமத்தில் முதல் தடவையாக பல்தேவைக்கட்டிடம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
சோஆ நிறுவனத்தினால் 70 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட  இக்கட்டிடத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் பேர்னாட் சவேஜ் திறந்துவைத்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .