2026 மே 07, வியாழக்கிழமை

பாரம்பரிய உணவுவகைகளை விற்பனை செய்யும் உணவு நிலையம்

A.P.Mathan   / 2013 மே 18 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
மாவட்ட செயலகம் மற்றும் காவியா சுய அபிவிருத்தி பெண்கள் நிலையம் என்பவற்றின் ஏற்பாட்டில் மட்டக்களப்பின் பாரம்பரிய உணவுவகைகளை விற்பனை செய்யும் உணவு நிலையம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.
 
வார இறுதி நாட்களில் மாலை வேளையில், இயங்கவுள்ள இவ் பெண் முயற்சியாளர்களின் இவ் நிலையத்தினை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
 
இதில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, காவியா அமைப்பின் தலைவி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
 
நேற்று மாலை ஆரம்பிக்கப்பட்ட உணவு நிலயத்திற்கு முன்னாள் முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் உணவு கொள்வனவு செய்தார்.
 
பெண்களின் இந்த உணவு நிலையத்தில் பாரம்பரிய உணவுகளான இடியப்பம், பால் அப்பம், பிட்டு, இட்லி, தோசை, கீரைப் பிட்டு, பசும் பால், தயிர், சோளம் புட்டு, குரக்கன் புட்டு என பாரம்பரிய உணவு வகைகள் குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவியா சுய அபிவிருத்தி பெண்கள் நிலையத்தின் தலைவி தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .