2026 மே 07, வியாழக்கிழமை

வசதி குறைந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணம்

A.P.Mathan   / 2013 மே 18 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வ.சக்திவேல்
 
மட்டக்களப்பு - குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் சமூக மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் மட். பட். தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயம், மட். பட். காந்திபுரம் கலைமகள் விதியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி பயிலும் வசதி குறைந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை காலை தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயம், அதிபர் வி.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
 
இந்நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.உலகேஸ்பரம், குருக்கள்மடம் மூக மேம்பாட்டு மையத்தின் தலைவரும் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளருமான கே.ஞானரெத்தினம், அதன் செயலாளர் எஸ்.துவாரகன், குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் திருவருள் சங்கத்தின் தலைவர் நவரெத்தினராசா செயலாளர், எஸ்.சதானந்தம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .