2026 மே 06, புதன்கிழமை

புளுக்களின் தாக்கத்தினால் விவசாய செய்கை பாதிப்பு

Kogilavani   / 2013 மே 23 , மு.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எஸ்.சசிக்குமார்


மட்டக்களப்பு, உன்னிச்சை குள நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்டுள்ள சிறுபோக விவசாயச் செய்கை ஒருவித புளுக்களின் தாக்கத்தினால் பாரிய பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

உன்னிச்சைத் திட்டத்தின் கீழ் சிறுபோக விவசாயச் செய்கை விதைப்பு முடிந்து சுமார் ஒரு மாத காலப் பகுதியிலேயே பெரும்பாலான பகுதிகளில் இப்புளுக்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் தாம் பாரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பூச்சி நாசினிகளைப் பயன்படுத்தி வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் புளுவானது ஒரு நாளைக்குள் பாரிய சேதத்தை ஏற்படுத்துவதோடு வேளாண்மையை அடியோடு சாப்பிடுவதாக விவசாயிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

எனவே, விவசாயத் திணைக்களம் இதனைப் பார்வையிட்டு சிறந்த பூச்சி நாசினியை விவசாயிகளுக்கு சிபாரிசு செய்யவேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விவசாயிகள் வேணடுகோள் விடுக்கின்றனர். தெமரிவிக்கின்றனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .