2026 மே 06, புதன்கிழமை

குடிநீரை பெறுவதற்கான உதவிக் கொடுப்பனவு வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 மே 24 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 110 குடும்பங்களுக்கு குடிநீரை பெற்றுக்கொள்வதற்கான உதவிக் கொடுப்பனவுகள் நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள  குடும்பங்களிலிருந்தும் சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கே தேசிய நீர்வழங்கல்; வடிகாலமைப்புச் சபையின் குடிநீரை பெற்றுக்கொள்வதற்கான உதவிக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்;வின் ஏற்பாட்டில் ஹிறாபவுண்;டேசன் நிறுவனத்தினால் இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .