2026 மே 06, புதன்கிழமை

மீள்குடியேறிய மக்களுக்கு கூரைத் தகடுகளும் கிணறு அமைப்பதற்கான உதவியும்

A.P.Mathan   / 2013 மே 24 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
 
ஏறாவூர் புன்னைக்குடா வீதி மஜீத் மாவத்தையில், கடந்தகால வன்செயல்களால் பாதிக்கப்பட்டு மீள்குடியமர்ந்துள்ள குடும்பங்கள் குடிசைகளை அமைத்துக் கொள்வதற்காக இன்று வெள்ளிக்கிழமை காலை கூரைத் தகடுகள் விநியோகிக்கப்பட்டன.
 
பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அரபு தேசத்து கொடையாளிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூரைத் தகடுகளையும் 41 குடும்பங்கள் அவர்கள் தங்களுக்கான கிணறுகளை அமைத்துக் கொள்ள உதவி பெறுவதற்கான சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .