2026 மே 09, சனிக்கிழமை

dd

வயிற்றுக்குள் ஊசியை வைத்து தைத்த வைத்தியர்

Kanagaraj   / 2013 மே 25 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.பரீத்

பெண்ணொருவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது அப்பெண்ணின்   வயிற்றுக்குள் ஊசியினை வைத்து தைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கிண்ணியா மஃரூப் நகரினை சேர்ந்த பெண் ஒருவரின் வயிற்றுப் பகுதியை அறுவை சிகிச்சை செய்யும் போதே  ஊசியொன்று வைத்து தைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் குறித்த பெண்ணுக்கு ஏற்;பட்ட வயிற்று வலி காரணமாக  கடந்த 22 ஆம் திகதி வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

அப்பெண்ணின் வயிற்றுப் பகுதியை  எக்ஸ்ரே  எடுத்து பார்த்த   போது வயிற்றுகுள் ஊசி இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால்,மீண்டும்  அறுவை சிகிச்சைக்கு உட்படுத்துவதற்காக அப்பெண் கிண்ணியா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.


  Comments - 0

  • vallarasu Saturday, 25 May 2013 03:59 PM

    அப்படியானால் அதை எடுப்பதற்கும் வைத்தியர் பணம் கேட்பாரோ..???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .