2026 மே 09, சனிக்கிழமை

புத்தர் சிலை மனக்கசப்பை ஏற்படுத்தும்: பிரதமருக்கு கடிதம்

Kanagaraj   / 2013 மே 25 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயில் நெடுஞ்சாலையோரத்தில் புத்தர் சிலை நிறுவுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியானது இனங்களுக்கிடையில் மனக்கசப்பை ஏற்படுத்தும் செயலாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

புத்தர் சிலையை நிறுவுதல் தொடர்பில் பிரதமர் தி.மு ஜயரட்னவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு நகரின் முகவாயிலாக விளங்கும் ஊறணி கொத்துக்குளத்து மாரியம்மன் கோயிலை அண்டிய பிரதான வீதியில் மட்டக்களப்பு மங்களராம விஹாரையின் பிக்குவின் வேண்டுகோளின் பேரில் புத்தர் சிலை வைக்கப்படுவதற்கு ஒழுங்குகள் நடைபெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இச்செயற்பாடானது மாவட்டத்திலுள்ள ஏனைய மதத்தினரை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. இது மத முரண்பாட்டை வளர்க்கும் ஒரு செயற்றிட்டாக உள்ளது. பெரும்பான்மையாக இந்துக்களையும், அடுத்து முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் போன்றோரையும், குறைந்த அளவில் பௌத்தர்களையும் கொண்டதாம இம்மாவட்டம் விளங்குகின்றது.

 இப்புத்தர் சிலைiயை வைக்கும் செயற்பாடானது ஏனைய மதங்களை கடைப்பிடிக்கும் மக்களை மிகமிக வேதைனைப்படுத்தியுள்ளது. இந்நாட்டின் மத விவகார அமைச்சர் என்ற வகையிலும், நாட்டின் பிரதம மந்திரி என்ற வகையிலும் இச்செயற்பாட்டை உடன் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அன்பாக வேண்டுகின்றேன்.
 
மட்டக்களப்பு நகரில் மிகவும் குறைந்தளவே அளவே பௌத்தர்கள் உள்ளனர். இவர்களுக்கு இங்கு உள்ள மங்களராம விகாரை வழிபாட்டு தலம் போதுமானது. அதைவிடுத்து இன ரீதியாகவும், மதரீதியாகவும் பிரச்சினையை தோற்றுவிக்கும் வகையில் மட்டக்களப்பு மங்களராம விகாரையின் பிக்குவின் வேண்டுகோளை ஏற்று தாங்களும், வீதி அபிவிருத்தி அதிகார சபையும் வழங்கிய அனுமதியின் பிரகாரம் மட்டக்களப்பு நகரின்; வாயிலில் புத்தர் சிலைiயை நிறுவுவது இங்குள்ள பெரும்பான்மை மதத்தினரை அவமதிக்கும் ஒரு செயல் என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள் என நான் கருதுகின்றேன்.

எனவே, அனைத்து மதங்களையும் வழிபடுத்தும் ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சர் என்ற வகையிலும், இந்நாட்டின் பிரதம மத்திரி என்ற வகையிலும் நீண்டகால அரசியல் அனுபவத்தை கொண்டவர் தாங்கள் என்ற வகையிலும் இச்செற்பாடு ஏனைய மதங்களிடையே எதிர்காலத்தில் எவ்வாறான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை தாங்கள் உணர்ந்து கொள்ள முடியும் என்பதை நான் கருதுகின்றேன்.

இப்புத்தர் சிலை ஸ்தாபிப்பு நடவடிக்கையானது வணக்கத்துக்குரிய புத்த பகவானையும் ஏனைய இன மத மக்களையும் அவமதிக்கும் ஒரு செயற்பாடாக உள்ளது. 

வரலாற்று ரீதியாக இலங்கைக்கு இரண்டாவது தடவையாக வருகை தந்த கௌதம புத்தர் சமாதானத்தை தமிழ் மக்களிடையே எற்படுத்தினர். (மாணிக்க ஆசன சண்டை) என்பதை பௌத்தர்களின் முக்கிய நூலான மகாவம்சம் எடுத்துக்காட்டுகின்றது.

ஆனால் இப்புனித புத்த பகவானை ஒரு இனத்துக்கு எதிராகவோ அல்லது ஏனைய மதங்களுக்கு எதிராகவோ பயன்படுத்துவது புத்த தர்மத்துக்கு செய்யும் பாரிய துரோகச் செயற்பாடாகும்.

உண்மையிலே மட்டக்களப்பு நகர வாயிலில் புத்தர் சிலையை நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மட்டக்களப்பு மங்களராம பிக்கு இதனை ஒரு இனத்துக்கு எதிராகவும், இவ்வேளை ஏனைய மதங்களுக்கு எதிராகவும் திட்டமிட்டே மேற்கொள்கின்றார் என அறியப்படுகின்றது.

எனவே, தாங்கள் இப்புத்தர் சிலை தாபிப்புக்கு வழங்கிய அனுமதியை உடன் நிறுத்தி கௌதம புத்தரின் தர்ம உபதேசத்தின் படி பௌத்தர்களையும், அதன் வழிவந்த புத்த பிக்குகளையும் இயக்கச் செய்யுமாறு அன்பாக வேண்டுகின்றேன்.

இவ்வாறான திட்டமிட்ட புத்தர் சிலை தாபிப்பு நடவடிக்கை இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களின் மனங்களை பாதிக்கும் வகையில் தொடர்ந்து மேற்கொள்ளப்படுமானால் நாங்கள் சாத்வீக ரீதியில் எங்களது மத உரிமையின் அடிப்படையில் அகிம்சை போராட்டங்களை நடாத்த வேண்டிய சூழல் உருவாக்கும்.

இச்சூழ்நிலை காரணமாக இவ்வரசாங்கம் மேலும் இந்நாட்டில் பௌத்த மதம் தவிர்ந்த ஏனைய மத மக்களின் உரிமைகளை பறித்து அடிமைகளாக வைத்திருப்பதை இவ்உலகிற்கு எடுத்துக்காட்டுவதாகவே விளங்குகின்றது.

ஆகவே, தயவு செய்து மட்டக்களப்பு நகர வாயிலில் புத்தர் சிலையை நிறுவ எடுக்கும் நடவடிக்கையை விரைவாக தடுத்து நிறுத்தி உதவுமாறு மீண்டும் மீண்டும் வேண்டிக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.




  Comments - 0

  • kikkakan Saturday, 25 May 2013 09:18 AM

    வரவேற்க வேண்டும்... உங்களால் ஏன் மட்டு மாநகரசபைக்கு அவ் வெற்றுஇடத்தில் சிவன் சிலையை வைக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றவில்லையே... திட்டமிடப்பட்ட நடவடிக்கை ஒன்றே நடக்க இருக்கிறது... ஆனால் நம் சொந்த ஊரான – மட்டக்களப்பில் உங்களால் இதுபோன்ற ஓர் அடையாளங்களை எற்படுத்த முடியாதா?

    Reply : 0       0

    vallarasu Saturday, 25 May 2013 03:52 PM

    நாட்டில் அனைத்து இடங்களிலும் பௌத்த விகாரை இல்லாத காரணத்தால்த்தான் ப‌யங்கரவாதம் ஏற்பட்டது. இப்படி நான் சொல்லவில்லை...

    Reply : 0       0

    Mathana Sunday, 26 May 2013 10:22 AM

    கடந்த வருடம் அவ்வையாருடைய சிலை மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பிரதான சந்தியில் (சண்முகா ஏஜென்சிக்கு முன்பாக உள்ள சந்தி) நிறுவுவதற்கு சிலர் முன் வந்த வேளை அதனை இங்குள்ள சிலர் பல காரணங்கள் காட்டி தடுத்து நிறுத்தினர், இன்று அவர்களின் சத்தத்தை காணவில்லை...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .