2026 மே 06, புதன்கிழமை

மு.கா. இளைஞர் காங்கிரஸ் கல்குடாத் தொகுதிக் காரியாலயம் திறப்பு

A.P.Mathan   / 2013 மே 25 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்
 
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் கல்குடாத் தொகுதிக் காரியாலயம் இன்று சனிக்கிழமை கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியில் மாவடிச்சேனையில் திறந்த வைக்கப்பட்டது.
 
ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினரும் இளைஞர் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி அமைப்பாளருமானர் எம்.எம்.அஹமட் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு காரியாலயத்தைத் திறந்து வைத்தார்.
 
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபீஸ் அஹமட் நஸீர், அமைச்சரின் இணைப்பாளர்கள் பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
 
கல்குடாத் தொகுதியில் உள்ள கிராம சேவகர் பிரிவு தோறும் நியமிக்கப்பட்டுள்ள பிரதேச இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர்களுக்கான அடையாள அட்டை பிரதம அதிதியால் வழங்கப்பட்டதுடன் வாழைச்சேனை அல் அக்ஷா விளையாட்டுக் கழகத்திற்கான விளையாட்டுச் சீருடையும் வழங்கி வைக்கப்பட்டது.



  Comments - 0

  • மக்களின் குரல் Saturday, 25 May 2013 11:04 AM

    கௌரவ நசீர் ஹாபீஸ் அஹமட் அவர்களே, தேர்தல் காலங்களில் கூறிய வாக்குறுதிகள் எல்லாம் எங்கே போய்விட்டன.

    Reply : 0       0

    vallarasu Monday, 27 May 2013 03:42 PM

    கூட்டத்தோட கோவிந்தா...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .