2026 மே 09, சனிக்கிழமை

ஆரையம்பதி பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2013 மே 27 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் பொருட்களை   காத்தான்குடி பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன்,  சந்தேக நபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.

கடந்த மாதம் 25ஆம் திகதி ஆயைரம்பதி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

இந்த நிலையில், ஆரையம்பதி, பாலமுனை பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேலும், இந்த சந்தேக நபரிடமிருந்து கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் ஒரு தொலைக்காட்சிப்பெட்டியையும் 7 கையடக்கத் தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேக நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .