2026 மே 06, புதன்கிழமை

விபத்துக்குள்ளான இளைஞர் மரணம்

Kanagaraj   / 2013 மே 27 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

விபத்திற்குள்ளாகி கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மீண்டும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட இளைஞர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று மாலை மரணமானார்.

மகிழடித்தீவு கொக்கடிச்சோலை பகுதியில் கடந்த 27 ஆம் திகதி மாலை இடம்பெற்ற விபத்தில் குறித்த இளைஞர் காயமடைந்தார்.

தான் செலுத்திவந்த மோட்டார் சைக்கிள் பனை மரத்தில் மோதுண்ட சம்பவத்தில் படுகாயமடைந்த 33 வயதுடைய ஜி.விஜயராஜா கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று மாலை மரணமாகியுள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .