2026 மே 09, சனிக்கிழமை

தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் நான்கு வீதிகள் புனரமைப்பு

Kogilavani   / 2013 மே 28 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் நான்கு வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன.

நான்கு வீதிகளின் புனரமைப்பு பணிகள் நிறைவுபெற்ற நிலையில், அவற்றை மக்களின் பயன்பாட்டுக்காக கையளிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கலந்துகொண்டு வீதிகளை உத்தியோகப்பூர்வமாக மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ், காத்தான்குடி 6ஆம் குறிச்சி ஜன்னத் மாவத்தைவீதி, பாவலேன் வீதி, றசீத் வீதி, எச்.ஆர்.எம். வீதி ஆகிய வீதிகளே நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .