2026 மே 06, புதன்கிழமை

டெங்கினால் சிறுவன் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 மே 29 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பகுதியில் சிறுவன் ஒருவன் டெங்கு நோய் தாக்கத்தினால் இன்று புதன்கிழமை காலை  உயிரிழந்துள்ளான்.

வாழைச்சேனை முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் குறுக்கு வீதியைச் சேர்ந்த அப்துல் ஸலாம் ஸைபுல் இஸ்லாம் (வயது 09) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். இந்தச் சிறுவன் வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் தரம் 4இல் கல்வி கற்று வருகின்றான்.

கடந்த சனிக்கிழமை காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட இந்தச் சிறுவன், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டான். இதன்போதே இந்தச் சிறுவன் டெங்கு நோய்த்  தாக்கத்திற்கு உள்ளாகியமை கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையிலேயே இந்தச் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .