2026 மே 09, சனிக்கிழமை

dd

காத்தான்குடி நகர சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2013 மே 30 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகரசபையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தக்கோரும் கவன ஈர்ப்பு போராட்டமொன்று இன்று வியாழக்கிழமை காலை காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள நகரசபை முன்பாக நடைபெற்றது.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் இவ்வியக்கத்தின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர்கள், அதன் சூறா சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

'நகரசபை நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை பேணவேண்டும்', 'நகர சபையின் கேள்விச்சபை மற்றும் நிலையியல் குழுவின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்', 'நகரசபையில் தீர்மானம் எடுக்கப்படாத நடவடிக்கைகளை தன்னிச்சையாக மேற்கொள்வதை நிறுத்தவேண்டும்',  'அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் இடம்பெறுகின்ற மோசடிகளை நிறுத்த வேண்டும்', 'பள்ளிவாயல்களின் சொத்துக்களை ஆக்கிரமிப்பதை நிறுத்த வேண்டும்', 'நகரசபை அமர்வுகளில் ஊடகவியலாளர்களை அனுமதிக்க வேண்டும்', 'நகரசபையின் செயலாளர் சட்டத்தின் வழியில் நகரசபையை வழிநடாத்த வேண்டும்' போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் நல்லாடச்சிக்கான மக்கள் இயக்கத்தின் சார்பிலான காத்தான்குடி நகரசபை உறுப்பினர்கள்,  அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல் எம்.நசீர்,  நல்லாடச்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை தலைவர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழிமி , முன்னாள் நகர சபை உறுப்பினர் ஏ.ஜி.எம்.ஹாறூன், நல்லாடச்சிக்கான மக்கள் இயக்கத்தின் செலயாளர் எம்.முஹ்சின் உட்பட அதன் சூறா சபை உறப்பினர்கள் அதன் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

மேற்படி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் இருவர் காத்தான்குடி நகர சபையில் உறுப்பினர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பரை தொடர்பு கொண்டு கேட்டபோது,

காத்தான்குடி நகர சபையின் அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படைத் தன்மையுடன்தான் நடைபெறுவதாகவும் எந்த ஒரு ஊழல் மோசடியும் இடம்பெறவில்லையெனவும் முடிந்தால் நிரூபித்துக்காட்டட்டும் எனவும் நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.




  Comments - 0

  • vallarasu Thursday, 30 May 2013 04:03 PM

    நீங்கள் என்ன செய்தாலும் அது உங்கள் ஊர் அமைச்சருக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு போல இருக்கும்.....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .