2026 மே 09, சனிக்கிழமை

வாக்காளர் தின வைபவம்

Kogilavani   / 2013 மே 30 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்
, எம்.எஸ்.எம்.நூர்தீன்

இலங்கை தேர்தல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்த வாக்காளர் தின வைபவம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமை புரிந்து ஓய்வுபெற்ற கிராம சேவை அதிகாரிகள், தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் இதன்போது தேர்தல்  திணைக்களத்தினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது வாக்களர் தினம் பற்றிய விழிப்புணர்வு உரை நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில், தேர்தல் திணைக்கள தலைமைச் செயலகத்தின் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எஸ்.முஹம்மட், மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்  அசங்க ரத்னாயக்க, பிரதேச செயலாளர்கள்,  திணைக்களத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .