2026 மே 06, புதன்கிழமை

விபத்துக்களை தடுக்க மாணவர்களுக்கு விழிப்பூட்டல்

Suganthini Ratnam   / 2013 மே 30 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்


நாளுக்குநாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கு தற்போது சுகாதாரத் திணைக்களமும் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவும் கல்வித் திணைக்களமும் கூட்டாக நடவடிக்கை எடுத்து வருவதாக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலய மாணவர்களுக்கு  அலிகார் தேசிய கல்லூரியில் இன்று வியாழக்கிழமை மாணவர்களுக்காக 'பாதுகாப்பான போக்குவரத்து வழிமுறைகளும் ஆரோக்கியம் பேணலும்' என்னும் கருத்தரங்கு இடம்பெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

வைத்திய சிகிச்சைகளை நாடி வருவோரில் கணிசமானளவினர் வீதி விபத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்ளெனத் தெரிவித்த சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக், மாணவர்கள் வீட்டிலும் வீதியிலும் பாடசாலைகளிலும் ஒழுக்க விழுமியங்களைக் கடைப்பிடித்து நடப்பார்களாயின் விபத்துக்களையும் வீண் இழப்புக்களையும் தவிர்த்துக்கொள்ள வழியேற்படுமெனவும் கூறினார்.

இந்நிகழ்வில் ஏறாவூர் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த டி.செல்வகுமார், ரீ.மகேசன், எமில்டா சந்தானம், சிரேஷ;ட மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் எம்.எச்.எம்.பழீல், எஸ்.சந்திரசிறி, எம்.முஹைதீன் ஆகியோர் மாணவர்களுக்கு வீதி விபத்துக்கள் நிகழ்வது குறித்த சந்தர்ப்பங்களை விளக்கினர்.

சுமார் 500 மாணவர்கள் இக்கருத்தரங்கில் பங்குபற்றினர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .