2026 மே 06, புதன்கிழமை

தோணி கவிழ்ந்ததில் மீனவரை காணவில்லை

Kanagaraj   / 2013 மே 30 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஜவ்பர்கான்

மட்டக்களப்பு, காத்தான்குடி  வாவியில் மிதந்த தோணியொன்றை பொதுமக்களும் மீனவர்களும் கரைசேர்த்துள்ளனர் என்று தெரிவித்த பொலிஸார் அந்த தோணியிலிருந்த மீனவரை காணவில்லை என்றும் தெரிவித்தனர்.

எனினும், அந்த தோணியில் சென்று காணாமல் போனவர் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லையெனவும் காத்தான்குடி பொலிசார் குறி;ப்பிட்டனர்.

காத்தான்குடி வாவியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோதுஇன்று மாலை வீசிய சுழல் காற்றினால் தோணி ஒன்று கவிழ்ந்ததாகவும் அந்த தோணியிலிருந்த மீனவர் ஒருவர்  வாவியினுள் விழுந்ததை கண்டதாகவும் மற்றொரு தோணியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் காத்தான்குடி வாவிக்கரையோரம் சென்று விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .