2026 மே 06, புதன்கிழமை

வாடல் நோயால் கத்தரிச்செய்கை பாதிப்பு

Suganthini Ratnam   / 2013 மே 31 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


அதிகரித்துவரும் வாடல் நோயினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கத்தரிச்செய்கை  பாதிப்படைந்துவருதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

களுதாவளை,  தேத்தாத்தீவு, மாங்காடு, குருக்கள்மடம், செட்டிப்பாளையம், களுவாஞ்சிக்குடி போன்ற இடங்களில் கத்தரிச்செய்கை பெருமளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வாடல் நோயினால் சுமார் 400 ஏக்கர் வரையான கத்திரிச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நோயினால் கத்திரிக்காய்கள் அழுகி சில தினங்களில் கருகி விழுந்து விடுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நோயை இல்லாது செய்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகளை மேற்கொள்ளுமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .