2026 மே 06, புதன்கிழமை

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள ஏற்பாட்டில் செயலமர்வு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 02 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இந்து அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கும்; மாணவர்களுக்குமான இறுதி நிலை பரீட்சைக்கான செயலமர்வு மட்டக்களப்பு இந்து கலாசார மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலேயே இச்செயலமர்வு நடைபெற்றது.

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அறநெறிப் பிரிவுக்கான உதவிப் பணி;ப்பாளர் ஹேமலோகினி குமரன் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆலய பிரிவுக்கான உதவிப்பணிப்பாளர் எம்.சண்முகநாதன், சிரேஷ்ட ஆராய்ச்சி அலுவலர் நித்தியவதி நித்தியானந்தன், ஓய்வுபெற்ற அதிபர் சைவப்புலவர் இ.கோபாலபிள்ளை, இந்து அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.(படங்கள்: எம்.எஸ்.எம்.நூர்தீன்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .