2026 மே 13, புதன்கிழமை

உலக சுற்றாடல் தினத்தையொட்டி சிரமதானம்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 02 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


உலக சுற்றாடல் தினத்தையொட்டி மட்டக்களப்பு சிறைச்சாலையின் ஏற்பாட்டில்; சிரமதானப் பணி இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு சிறைச்சாலை, சுகாதார வைத்தியதிகாரி பணிமனை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆகியன இச்சிரமதானப் பணியில் ஈடுபட்டன.

இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, சிறைச்சாலை, ஆஸ்பத்திரி வீதி உட்பட பல இடங்களில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டன.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சர் கித்சிறி பண்டார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறைச்சாலை நலன்புரி அதிகாரி கே.ஸ்ரீனிவாசன், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், சிறைச்சாலை அதிகாரிகள், சிறைக்கைதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .