2026 மே 09, சனிக்கிழமை

dd

மாசிக் கருவாடு உற்பத்தியில் ஈடுபடுகின்ற பெண்களுக்கு நிதியுதவி

Suganthini Ratnam   / 2013 ஜூன் 03 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாசிக் கருவாடு உற்பத்தியில் ஈடுபடுகின்ற 240 பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக அந்த மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

ஒவ்வொரு பெண்களுக்கும் 10,000 ரூபா படி இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளன. மாசிக் கருவாட்டு உற்பத்தியாளர்களுக்கு 'திவிநெகும' திட்டத்தின் கீழ், இலங்கை வங்கியின் ஊடாக இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், சிறந்த முறையில் மாசிக் கருவாடு உற்பத்தியில் ஈடுபடுகின்ற 10 பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் பெயர் விபரங்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 'திவிநெகும' திட்டத்தின் ஊடாக மாசிக் கருவாடு உற்பத்தியை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .