2026 மே 06, புதன்கிழமை

கரையோர வளங்களை முகாமைத்துவம் செய்தல் தொடர்பான மாநாடு

Kogilavani   / 2013 ஜூன் 03 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்


கரையோர வளங்களை முகாமைத்துவம் செய்தல் தொடர்பான விசேட மாநாடு மட்டக்களப்பு பிரிஜ் வீவ் இன் விடுதியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இலங்கை கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி அலுவலக ஊழியர்களுக்காக இம்மாநாடு நடத்தப்பட்டது.

கரையோரம் பேணல் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.கோகுலதீபன் தலைமையில் இடம்பெற்ற இம்மாநாட்டில் பிராந்திய உள்ளூராட்சி பிரதி ஆணையாளர் திருமதி என்.சத்தியானந்தி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

திணைக்களத்தின் தேசிய திட்ட பணிப்பாளர் பி.ச்.ஜே.பரிரேமதிலக உட்பட திணைக்கள அதிகாரிகள் விரிவுரைகளை நடாத்தினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .