2026 மே 06, புதன்கிழமை

புதிய காத்தான்குடியிலுள்ள வீடொன்றில் கொள்ளை

Suganthini Ratnam   / 2013 ஜூன் 03 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் புதிய காத்தான்குடி பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கநகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

புதிய காத்தான்குடி மத்திய வீதியிலுள்ள வீடொன்றிலேயே இன்று திங்கட்கிழமை காலை இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக  காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். 

வீட்டின் யன்னல் கதவு உடைக்கப்பட்டு அதன் மூலமாக வீட்டினுள் புகுந்த  கொள்ளையர்கள், வீட்டிலிருந்த 10 பவுண் தங்கநகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகவும்   பொலிஸார் கூறினர்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .