2026 மே 06, புதன்கிழமை

யோகேஸ்வரன் எம்.பி. -கிறிஸ்ரின் ரொபிசொன் அம்மையார் சந்திப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 03 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்

 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனுக்கும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபிசொன்  அம்மையாருக்கு (ஊக்சளைவஇநெ சுழடிஇஉக்ழன்)  இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இந்தச் சந்திப்பு  நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பிலும் கிறிஸ்ரின் ரொபிசொன்  அம்மையாரிடம்,  நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் எடுத்துக் கூறினார்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு நிலைமை,  புத்தர் சிலை நகர வாயிலில் வைக்கப்படும் விடயம், வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்படுத்தப்பட்டுள்ள விமானப்படை வீடமைப்பு விடயம், வவுணதீவு பிரதேசத்தில் 25,000 ஏக்கர் காணி ஊர்காவல் படையினருக்கு விவசாயத்துக்கு வழங்கப்பட்டமை, வாகரை கடற்பகுதியில் வெளிமாவட்டத்தினரின் அட்டை பிடிப்பால் ஏற்படும் பிரச்சினைகள், கடந்த சனிக்கிழமை இரவு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 3 கோவில்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள்  தொடர்பிலும் கிறிஸ்ரின் ரொபிசொன்  அம்மையாரிடம் எடுத்துக் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .