2026 மே 06, புதன்கிழமை

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அடங்கிய குழு இந்தியாவிற்கு விஜயம்

Kogilavani   / 2013 ஜூன் 04 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்எம்.முர்ஷித்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று நேற்று திங்கட்கிழமை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

இந்தியா – கேரளா மாநிலத்தில் பஞ்சாயத்து சபையின் நடைபெறுகின்ற உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளின்; சட்ட விடயம் தொடர்பிலான செயலமர்வில் கலந்துகொள்வதற்காக இக்குழு இந்தியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளது.

இக்குழுவில், கிழக்கு மாகாண சபை தவிசாளர் திருமதி ஆரியவதி கலப்பதி, கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர்; எம்.எஸ்.சுபைர், மாகாண சபை பிரதம செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .