2026 மே 09, சனிக்கிழமை

dd

காத்தான்குடி நகரசபையின் அமர்வுகளில் ஊடகவியலாளர்கள் அனுமதிப்பு

Kogilavani   / 2013 ஜூன் 04 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகரசபையின் அமர்வுகளில் ஊடகவியலாளர்களை அனுமதிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'காத்தான்குடி நகரசபையின் அமர்வுகளை பார்வையிடுவதற்கு ஊடகவியலாளர்களை அனுமதிப்பதெனவும் அவர்களை அழைப்பதெனவும் நகரசபையின் மாதாந்த அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனாலும், தேசிய ஊடகங்களுக்கு பிராந்திய ஊடகவியலாளர்களாக செயற்படும் ஊடகவியலாளர்கள் மாத்திரமே இதற்கு அனுமதிக்கப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று காத்தான்குடி நகரசபையின் அமர்வுகளில் இடம்பெறும் கலந்துரையாடல்கள் மற்றும் கருத்துரைகளை நகரசபை உறுப்பினர்கள் எவரும் தனியாக ஒலிப்பதிவு செய்யக்கூடாது.

நகரசபை மாத்திரம் இதனை ஒலிப்பதிவு செய்யும் அதேவேளை, தேவையான உறுப்பினர்கள் அதன் பிரதியொன்றை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது' என காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மேலும் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் காத்தான்குடி நகரசபைக்கு முன்னாள் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் காத்தான்குடி நகரசபையில் வெளிப்படத்தன்மை பேணுமாறும் நகரசபை அமர்வுகளை பார்வையிட ஊடகவியலாளர்களை அனுமதிக்குமாறும் கோரி கவனஈர்ப்பு போராட்டமொன்றை நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .