2026 மே 09, சனிக்கிழமை

இலவச குடிநீர் இணைப்புக்கான நிதி வழங்கல்

Menaka Mookandi   / 2013 ஜூன் 04 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

காத்தான்குடி பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ்வாழும் 30 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் வழங்களுக்கான நிதி உதவி வழங்கல் மற்றும் பிரதேசத்திலுள்ள 4 முன்பள்ளிகளுக்கு கற்றல் மற்றும் கற்பித்தல் உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

சவூதிஅரேபிய பரோபகாரிகளின் உதவியினால் இந்நிவாரணங்கள் வழங்கப்பட்டன. பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சவூதி பரோபகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது அப்ரா, அல்பலா, ஜன்னத், ஹிஸ்புல்லாஹ் ஆகிய முன்பள்ளிகளுக்கு கற்றல் உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .