2026 மே 06, புதன்கிழமை

'கொய்கா' திட்ட நிபுணர்கள் குழு பட்டிருப்பு கல்வி வலய பாடசாலைகளுக்கு விஜயம்

Kogilavani   / 2013 ஜூன் 05 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு, பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு 'கொய்கா' திட்ட நிபுணர்கள் குழு நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்தது.

பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள மெதடிஸ்த்த மிஷன் பெண்கள் பாடசாலை, கோட்டைக்கல்லாறு கண்ணகி வித்தியாலயம் ஆகிய இரு பாடசலைகளுக்கும் இக் குழுவினர் விஜயம்செய்து இப்பாடசாலைகளில் கொய்கா நிறுவனத்தின் மூலம் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை இதன்போது பார்வையிட்டனர்.

இப்பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள், கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் என்பவற்றையும் இக் குழுவினர் பார்வையிட்டதுடன் பாடசாலைகளின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டனர்.

கொய்கா திட்ட நிபுணர்கள் குழுவுடன், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி என்.புள்ளநாயகம், கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகளும் இங்கு விஜயம் செய்திருந்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .