2026 மே 09, சனிக்கிழமை

dd

மனைவிக்கு தீ வைத்த கணவனுக்கு மரண தண்டனை

Kanagaraj   / 2013 ஜூன் 05 , பி.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித், எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் தலவாய் கிராமத்தில் மனைவிக்கு தீ வைத்து கொலை செய்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ள அவரது கணவனுக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தலவாய்க் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 49 வயதான நடராசா சித்திரவேல் என்பவருக்கே இவ்வாறு நேற்று புதன்கிழமை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நிதிபதி கே.சிவபால சுந்தரம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரனைக்கு  எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிபதி மேற்கண்டவாறு  தீர்ப்பளித்தார்.

ஏறாவூர் தலவாய்க் கிராமத்தைச் சேர்ந்த இவருடைய மனைவியான தங்கராசா வனிதாவுக்கும்; இவருக்கம் இடையில் 2007 ஆம் ஆண்டு யூலை மாதம் 15 ஆம் திகதி  குடும்பப் பிரச்சினை ஒன்று ஏற்பட்டுள்ளது.

 இவ்வேளையில் ஆத்திரம் அடைந்த குறித்த நபரின் மனைவி தான் தற்கொலை செய்யப் போவதாக கணவனை அச்சுறுத்தி தனக்குத்தானே மண்ணென்னை ஊற்றியுள்ளார். இதனை சாதகமாகப் பயன் படுத்திக் கொண்ட குறித்த அவரது கணவன் தீ மூட்டியுள்ளார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

மனைவி மீது தீ வைத்து கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளியாக இணங்காணப்பட்ட இவரை கைது செய்ததாக அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த ஏறாவூர் பொலிஸார் மட்டக்களப்பு நீதவான் நீமன்றத்தில் அவரக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையிலேயே மேற்படி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்வரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதி  குறித்த நபருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .