2026 மே 07, வியாழக்கிழமை

சிராஜ் அரபுக் கல்லூரி விடுதியில் தீ

Suganthini Ratnam   / 2013 ஜூன் 06 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன், ரீ.எல்.ஜவ்பர்கான்,எஸ்.எம்.எம்.முர்ஷித்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடியிலுள்ள சிராஜ் அரபுக் கல்லூரியின் விடுதியில் பரவிய தீ காரணமாக அங்கிருந்த உடைமைகள் சில எரிவடைந்துள்ளன.

சிராஜ் அரபுக் கல்லூரியின் விடுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் தீ பரவியுள்ளது. இதன் காரணமாக மாணவர்களின் படுக்கை அறை கட்டில்கள், உடுப்புப் பெட்டிகள்,  பாடசாலை உபகரணங்கள், கணினி உள்ளிட்டவைகள் தீக்கிரையாகியுள்ளதாக சிராஜ் அரபுக் கல்லூரியின் பொதுச்செயலாளர் எம்.எல்.எம்.தாபீர் தெரிவித்தார்.

இப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் தீ மேலும் பரவாதவாறு  கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாகவும் அவர் கூறினர்.

அரபுக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு  கடந்த 29.05.2013ஆம் திகதியன்று விடுமுறை வழங்கப்பட்டது. இதனால்  மாணவர்கள் எவரும் இவ்விடுதியில் தங்கியிருக்கவில்லையெனவும் சிராஜ் அரபுக் கல்லூரியின் பொதுச்செயலாளர் எம்.எல்.எம்.தாபீர் தெரிவித்தார்.

இத்தீ விபத்து தொடர்பான விசாரணையை  வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .