2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

வாய்க்காலில் காணாமல் போன இளைஞரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 06 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

பொலன்னறுவை – மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான செவனப்பிட்டி பகுதியில் உள்ள வாய்க்கால் ஒன்றினுள் வாகனம் ஒன்று குடை சாய்ந்து வீழ்ந்ததில் வாய்க்காலினுள் காணாமல் போன இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனையிலிருந்து தெஹ்கியத்தகண்டி பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த வாகனமே இன்று வியாழக்கிழமை காலை 06 மணியளவில் (06.06.2013) குடை சாய்ந்து வாய்க்காலினுள் வீழ்ந்துள்ளது.

தந்தையும் மகனும் மீன் வியாபாரத்திற்காக மீன்களை இந்த வாகனத்தில் கொண்டு சென்றுகொண்டிருந்ததாக பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

வாய்க்காலினுள் விழுந்த வாகனத்திலிருந்து தந்தை பாதுகாப்பாக வெளியேறியுள்ளார். ஆனாலும்  காணாமல் போன மகனை தேடும் பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில் அரலகங்கவில பொலிஸ் பிரிவில் உள்ள வாய்க்காலிருந்து இன்றையதினம் பகல் இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை மக்கலடி வீதியைச் சேர்ந்த முகம்மது புகாரி முபீன் (வயது  22) என்ற இளைஞரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணையை அரலகங்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .