2026 மே 07, வியாழக்கிழமை

வாகன விபத்தில் இளைஞன் பலி

Menaka Mookandi   / 2013 ஜூன் 06 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

பொலனறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லைப் பிரதேசமான செவனப்பிட்டி பகுதியில் பட்டாபடி வாகனம் ஒன்று இன்று காலை மணியளவில் 24 அடி வாய்க்காலில் குடை சாய்ந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனையில் இருந்து காலை 6 மணியளவில் தெகியத்தகண்டி பகுதிக்கு தந்தையும் மகனும் மீன் வியாபாரத்திற்காக மீன்களைக் கொண்டு சென்று கொண்டிருந்த வேளையில் செவனப்பிட்டியில் இருந்து தெகியத்தகண்டி பகுதிக்குச் செல்லும்  பகுதியில் அரலகங்வில பொலிஸ் பிரிவில் அலுத்உய பிரதேசத்தில் உள்ள வாய்க்கால் ஒன்றில் குறித்த வாகனம் குடைசாய்ந்துள்ளது.

வாய்க்காலில் விழுந்த வாகனத்தில் இருந்து தந்தையும் மகனும் வெளியேறியுள்ள சந்தர்ப்பத்தில் தந்தை தப்பியுள்ள நிலையில் மகன் காணாமல் போயுள்ளார். இவரை நீர் அடித்துச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் உறவினர்களும் பொலிஸாரும் தேடிய போது பகல் 01.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டார்.

வாழைச்சேனை மக்கலடி வீதியைச் சேர்ந்த முகம்மது புகாரி முபீன் (வயது – 22) என்றழைக்கப்படும் இளைஞரே இவ்விபத்தில் உயிரிழந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவ்விளைஞனின் தந்தை காயமடைந்துள்ளார். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .