2026 மே 07, வியாழக்கிழமை

பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளை சர்வதேசத்துக்கு எடுத்தியம்புவதற்கான கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2013 ஜூன் 06 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


தேசிய மட்டத்தில் பாரம்பரிய கலை, கலாசர நிகழ்வுகளை எடுத்துக்காட்டி அவற்றை சர்வதேச மட்டத்திக்கு எடுத்தியம்புவதற்காக வேண்டி மட்டக்களப்பு மாவட்ட கலைக் கழகங்களுக்கு இடையேயான கலந்துரையாடல் ஒன்று இன்று மட்டக்களப்பு கச்சேரியில் இடம்பெற்றது.

மாவட்ட கலாசார உத்தயோகஸ்தர் த.மலர்ச்செல்வன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்; கிழக்குமாகாண பண்பாட்டலுவர்கள் அமைச்சின் பணிப்பாளர் வெலிக்கல்ல பிரத அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு செய்ப்பட்ட கலைக்கழக அங்கத்தவர்கள், கலாசார உத்தியோகஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இக்கலந்துலையாடலில் மாவட்ட ரீதியில் கலாசார குழு அமைப்பது தொடர்பாகவும் தேசிய ரீதியாக கலை நிகழ்வுகளை எடுத்துச் செல்வதற்கும், கலைகளை மேம்படுத்துவதற்கும், கருவிகள் மற்றும் பயிற்சிகள் தேவை எனவும் கலைக் கழகங்களால் முன்வைக்கப்பட்டன.

மேற்படி கலைஞர்களுக்குத் தேவையானவைகளை தாம் மேற்கொள்வதற்கு  கிழக்குமாகாண பண்பாட்டலுவர்கள் அமைச்சின் பணிப்பாளர் வெலிக்கல்ல கவனத்திற் கொண்டார்.

இதன்போது மட்டக்களப்பு மண்வாசனையினை பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய கலைகளை மாவட்டத்திலுள்ள 14 பிரதேசங்களிலுமிருந்து தெரிவு செய்யப்பட்டதோடு எதிர்வரும் மாதம் இக்கலைகளுக்குரிய பயிற்சிகளும் நடைபெறவுள்ளது என்பதோடு பிரதேச மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் கலை முகாம்களை நடைத்தவும் ஏற்பாடுபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .