2026 மே 09, சனிக்கிழமை

dd

கோயில் உண்டியல் உடைப்பு: சந்தேகத்தில் ஒருவர் கைது

Kogilavani   / 2013 ஜூன் 08 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் கோவில் உண்டியலை உடைத்து திருடியதாக  சந்தேகப்படும் நபர் ஒருவரை பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள முருகன் கோவிலின் உண்டியலை கடந்த புதன்கிழமையன்று இனம் தெரியாத சிலர் உடைத்து திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை செய்து வந்த பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவரை பொலிஸார் தேடி வருவதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .