2026 மே 07, வியாழக்கிழமை

தங்க சங்கிலி திருடிய பெண் உட்பட இருவர் கைது

Kogilavani   / 2013 ஜூன் 08 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்
மட்டக்களப்பு, புன்னைச்சோலை காளி கோயில் தீ மிதிப்பின் போது பக்தர்களின்  தங்கச் சங்கிலிகளைத்திருடிய பெண்ணொருவர் உட்பட இருவர் மட்டக்களப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தீமிதிப்பு தினமான நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஆலயத்திற்கு வந்த இருவரின் சங்கிலிகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தீ மிதிப்பு உற்சவத்தில் கலந்து கொள்ளவென ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்திருந்த நிலையில் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒருவரின் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓட முற்பட்ட வேளையும், மற்றையவரின் சங்கிலியை அறுக்க முயற்சித்த வேளையிலுமே இவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் பிரபலமான அம்மன் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் புன்னைச்சோலை காளி கோயில் திருவிழாவை முன்னிட்டு குற்றச் செயல்களை தடுப்பதற்காக 200க்கும் அதிகமான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .