2026 மே 07, வியாழக்கிழமை

லொறி விபத்திற்குள்ளானதில் நால்வர் காயம்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 09 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பத்திரிகைகளை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த லொறியொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விபத்திற்குள்ளானதில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து நேற்று சனிக்கிழமை இரவு, ஞாயிற்றுக்கிழமைக்குரிய பத்திரிகைகளை ஏற்றிக்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நோக்கி  வந்துகொண்டிருந்த லொறியின் முன் சில்லு டயர் வெடித்துள்ளது. தம்புள்ளைப் பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போதே 4 பேர் காயமடைந்துள்ளனர்.  இவ்விபத்தில் சிறிய காயத்திற்குள்ளான மூவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில்; தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாக தம்புள்ளை வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .