2026 மே 07, வியாழக்கிழமை

உறவினர்கள் முறைப்பாடு; சடலத்தை தோண்டியெடுக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 09 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

உறவினர்கள் செய்த  முறைப்பாட்டையடுத்து சடலத்தை தோண்டியெடுத்து பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கையை பட்டிப்பளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பி  10 தினங்களில் மரணமடைந்தவரின் சடலத்தையே தோண்டியெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை - பட்டிப்பளை பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் செய்த முறைப்பாட்டையடுத்தே  பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

உறவினர்கள் செய்த முறைப்பாட்டையடுத்தே   சடலத்தினை தோண்டி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக பட்டிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

2012ஆம் ஆண்டு வெளிநாடு சென்ற கொக்கட்டிச்சோலை 10ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 45 வயதையுடைய ஆறுமுகம் சத்தியசீலன் என்பவர் கடந்த மாதம் நாட்டுக்கு திரும்பியிருந்தார்.

இவர் தனது வீட்டுக்கு வந்து 10 தினங்களில் வீட்டில் மரணமடைந்துள்ளார். தனது கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது மனைவியினால் தெரிவிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக மரணமானவரின் உறவினர்கள் பட்டிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த சடலத்தினை தோண்டியெடுத்து விசாரணைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பட்டிப்பளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .