2026 மே 07, வியாழக்கிழமை

சாரதிக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 09 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

பஸ்ஸின் சில்லில் சிக்கி 2 வயது குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சாரதியை எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபரை சனிக்கிழமை (08..06.2013) ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுவன்கேணி பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை பஸ்ஸின் சில்லில் சிக்கி 2 வயது குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை ஏறாவூர் பொலிஸார் கைதுசெய்தனர். 
நி
றுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸை சாரதி பின்புறமாகச் செலுத்தியபோதே, பஸ்ஸின் சில்லில் சிக்கி இந்தக் குழந்தை உயிரிழந்தது.
புஸ்பராசா சதுர்நிஸா (வயது 2) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .