2026 மே 07, வியாழக்கிழமை

விபத்தில் ஐவர் காயம்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 10 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேசத்தில்; இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

ஏறாவூர் எரிபொருள் நிரப்பு நிலையச் சந்தியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஏறாவூர் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான  பஸ் வண்டியும் முச்சக்கரவண்டியும் மோதியதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த 5 பேரும் உடனடியாக ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்து தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். (படங்கள்: ஏ.எச்.அப்துல் ஹுஸைன்)




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .