2026 மே 09, சனிக்கிழமை

dd

வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய வருடாந்த மகோற்சவம்

Kogilavani   / 2013 ஜூன் 10 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு, வந்தாறுமூலை ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 11ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இவ் உற்சவசத்தில் அன்னாபிசேகம், அனந்த சயனத் திருவிழா, திருவேட்டைத் திருவிழா என்பனவும் நடைபெறவுள்ளன.

இதற்கமைய, 22ஆம் திகதி உறியடி உற்சவமும் அதனைத்; தொடர்ந்து தீமிதிப்பும் நடைபெறவுள்ளது.

23ஆம் திகதி காலை களுவன்கேணி சமுத்திரத்தில் தீர்த்தோற்சவமும்; யாக கும்பம் சொரிதல், பொன்னூஞ்சல், திருவிளக்கு பூசை, கொடியிறக்கமும் நடைபெறவுள்ளன.

வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஸ்ணு சந்நிதான உற்சவ கிரியைகளை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சாட்சிநாதன் தெய்வந்திரக் குருக்களுடன் இணைந்து சிவஸ்ரீ குமார விக்னேஸ்வரக் குருக்களும் மேற்கொள்வார்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .