2026 மே 09, சனிக்கிழமை

பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான வலையமைப்புக்கள் உருவாக்கம்

Kogilavani   / 2013 ஜூன் 11 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில், பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிராக பிரதேச மட்டத்திலான
வலையமைப்புக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இவ் வலையமைப்புக்கள் உருவாக்கப்படவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்த வலையமைப்புக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைவாக, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று திங்கட்கிழமை இந்த வலையமைப்பு அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

அங்குரார்ப்பணம் செய்யும் கூட்டம் காத்தான்குடி சமூக பராமரிப்பு நிலைய மண்டபத்தில் காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அக்பர் தலைமையில் நடைபெற்றது.

இதில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்திட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர், காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஐ.சுபைர். காத்தான்குடி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிபபாளர் கே.கருணாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .