2026 மே 07, வியாழக்கிழமை

பலாச்சோலையில் சுகநல நிலையம் திறப்பு

Kogilavani   / 2013 ஜூன் 11 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்துக்குட்பட்ட பலாச்சோலைக் கிராமத்தில் வேர்ல்ட் விஷன் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட சுகநல நிலையம் திறந்துவைக்கப்பட்டது.

இக் கட்டிடமானது 16 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில், சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.ரவிச்சந்திரன் நாடா வெட்டி கட்டிடத்தை திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் செங்கலடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், வேர்ல்ட் விஷன் நிறுவன ஏறாவூர்ப்பற்று பிரதேச முகாமையாளர் அ.ரவீந்திரன், இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்புக் கிளைத் தலைவர் த.வசந்தராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பின்தங்கிய இந்தப் பிரதேச மக்கள் நன்மையடையும் வகையில் சுகாதார நல வசதிகளானது அம்மக்களின் காலடிக்கு கொண்டுவரப்பட்டிருப்பதாக இந்நிகழ்வில் உரையாற்றிய சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.ரவிச்சந்திரன் குறிப்பிட்டார்.

இந்த சுகாதார நிலையம் காரணமாக வந்தாறுமூலை, மாவடிவேம்பு, தேவபுரம் மற்றும் களுவன்கேணி போன்ற கிராம மக்களது தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று வேர்ல்ட் விஷன் நிறுவன ஏறாவூர்ப்பற்று பிரதேச முகாமையாளர் அ.ரவீந்திரன் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .