2026 மே 07, வியாழக்கிழமை

மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரிக்கான ஒப்பந்தம் கைச்சாத்து

Kogilavani   / 2013 ஜூன் 11 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்


இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ள உலமாக்களுக்கான மலிக் அப்துல்லாஹ் பலக்லைக்கழக கல்லூரிக்கான ஒப்பந்தம் காத்தான்குடியில் கைச்சாத்திடப்பட்டது.

இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும மற்றும் இலங்கை ஹிறா பவுண்டேசன் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடலானது காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது.

இந்தவைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி மோகன்லால் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் 25 பல்கலைக்கழக கல்லூரிகள் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தள்ளது.

இதில் 20 பலக்லைக்கழக கல்லூரிகள் அரசாங்கமும், 5 பல்கலைக்கழக கல்லூரிகள் தனியாரும் ஆரம்பிக்கவுள்ளனர்.

அந்த வகையில் ஸ்ரீலங்கா பவுண்டேசன் நிறுவனமும் இளைஞர் திறன் அபிவிருத்தி அமைச்சும் இணைந்து மலிக் அப்துல்லா எனும் இந்த பல்கலைக்கழக கல்லூரியை ஆரம்பிக்கவுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .