2026 மே 07, வியாழக்கிழமை

சிறுமி வல்லுறவு; ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜூன் 12 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தளவாய் கிராமத்தில் 13 வயதான சிறுமியொருவரை  வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் ஒருவரை ஏறாவூர் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

  54 வயதான வியாபாரியொருவரே நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தன்னை வல்லுறவுக்குட்படுத்தியதாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சந்தேக நபரை நேற்று செவ்வாய்க்கிழமை மாலையே  கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை இன்று புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0

  • vallarasu Wednesday, 12 June 2013 04:32 PM

    இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் சிருவர் துஷ்பிரயோகத்திற்கு காரணம் பெற்றோர்களே...!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .